கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஏகாதசி பூஜை; மூலவருக்கு அபிஷேகம்
ADDED :436 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தை மாதம் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், தை ஏகாதசியை முன்னிட்டு கோவை, அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை, நடைபெற்றது. இதில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் சிறப்பு புஷ்பம் மற்றும் துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.