உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் உற்சவ நாட்களில், தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்ச்சியாக தை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !