மழைக்காக சிறப்பு பூஜை கிராம மக்கள் பங்கேற்பு
ADDED :4791 days ago
பழநி: பழநிவட்டாரத்தில் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கன்னிமார் கோயிலில் பூஜை செய்தனர். பூசாரி பொன்னுச்சாமி கூறுகையில்,""பழநி குதிரையாறு அருகேயுள்ள சமுக்காளம் பாறையில் உள்ள கரகத்துக் கன்னிமார் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மழைவேண்டி பூஜை நடக்கிறது. சப்தகன்னிமார்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை," என்றார். பாப்பம்பட்டி பள்ளிவாசல் தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.