புதிய வெள்ளி தேரில் கச்சபேஸ்வரர் பவனி
ADDED :4790 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், வெள்ளித் தேர் தேரோட்டம் நடந்தது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், வெள்ளித் தேர் உருவாக்கப்பட்டுள்ளது. தேர் 21 அடி உயரம், எட்டு அடி அகலம் கொண்டது. தேர் மீது 200 கிலோ, வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலை தேர் வெள்ளோட்டம் நடந்தது. இரவு தேரோட்டம் நடந்தது. மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, வெள்ளித்தேரில் இரவு 7 மணிக்கு, கச்சபேஸ்வரர், அம்மனுடன் எழுந்தருளினார். அதன்பின் மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, தேரோட்டம் துவங்கியது.