வருஷநாடு அருகே கோயிலை இடித்த வனத்துறையினர்!
ADDED :4789 days ago
வருஷநாடு: வருஷநாடு மொட்டப்பாறை அருகே, பொதுமக்கள் கட்டிய கோயிலை வனத்துறையினர் தரைமட்டமாக இடித்து தள்ளினர். மொட்டப்பாறை ஏற்றத்தில், கிராம மக்கள் சார்பில், சங்கலியாண்டி கோயில் கட்டி வந்தனர்.பாதி பணிகள் முடிந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். கட்டட பணியை தொடர்வதற்கு வனத்துறை இடையூறு செய்வதாக கலெக்டரிடம் மனுக்கொடுத்தும், நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று வனத்துறையினர் பொக்லைன் உதவியுடன் கட்டிய கோயிலை தரைமட்டமாக இடித்து தள்ளினர். அம்பேத்கார் நகர் மக்கள் சார்பில், வனத்துறை அதிகாரி ரஜேந்திரன் மீது வருஷநாடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.