உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்

மூலநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.53 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, பரிகார ஹோமங்கள் நடந்தது. பாகூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரம் முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 1008 சங்குகளால் அபிஷேக ஆராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி தாசில்தார் பிரபாகரன், நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர்நாராயணன், பாபு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !