உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளுக்கு இரண்டு இரு சக்கர வாகனங்கள் நன்கொடை

திருப்பதி பெருமாளுக்கு இரண்டு இரு சக்கர வாகனங்கள் நன்கொடை

திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இரண்டு இரு சக்கர வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன


சென்னையைச் சேர்ந்த டிவிஸ் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த NDS Eco பிரதிநிதிகள் இன்று செவ்வாய்க்கிழமை திருமலை பெருமாளுக்கு மின்சார இரு சக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கினர். இந்த வாகனத்தின் விலை ரூ. 2.70 லட்சமும்,  ரூ. 1.56 லட்சமும் என நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர். முன்னதாக, கோவிலில் வாகனத்திற்கான சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் செய்தனர். பின்னர், வாகன சாவியை திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒப்படைத்தனர். இதில் டிவிஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், MD ஸ்ரீ சுதர்சன், திருமலை சுப்பிரமணியம், NDS Eco தலைவர் ரெட்டி மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !