உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோயில் வளாகம் அருகே பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா நடந்தது. விழாவை ஒட்டி முதல் நாள் வாஸ்து சாந்தி, ஹோமம், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம், தீர்த்த பிரசாதம் வழங்கல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் ஹோமம், திவ்ய பிரபந்தம், யாத்ரா தானம் நடந்தது. காலை காரமடை ஸ்ரீ வேத வியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலமலை அரங்கநாதர் திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !