அயோத்தி ராமர் கோவிலின் தலைமை ஆச்சார்யர் சத்யேந்திர குமார் தாஸ் காலமானார்
புதுடில்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி மகந்த் சத்யேந்திர தாஸ், 85, உடல் நலக்குறைவால் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலின் தலைமை பூசாரி மகந்த் சத்யேந்திர தாஸ். இவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மகந்த் சத்யேந்திர தாஸ் காலமானார். அவரது மறைவுக்கு உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரியும், ஸ்ரீ அயோத்தி தாம் ஸ்ரீ ராமரின் உச்ச பக்தருமான ஆச்சார்ய ஸ்ரீ சத்யேந்திர குமார் தாஸ் ஜி மஹாராஜின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மாவுக்கு ஸ்ரீ ராமரின் காலடியில் இடம் அளிக்கவும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது சீடர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். என கூறினார்.