தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர்
ADDED :255 days ago
திருச்சி: ஆண்டுதோறும் வரும்; தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதரின் தங்கையான சமயபுரம் மாரியம்மன் உற்சவர் நேற்று (11) காலை கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்து அலங்காரப் பந்தலில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். இந்த ஆண்டுக்கான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி கொள்ளிடக்கரையில் நேற்றிரவு நடந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் சார்பில், சீர்வரிசை பொருட்களான பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், பழவகைகள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொள்ளிடம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் தலையிலான குழுவினர் வழங்க, சமயபுரம் கோயில் நிர்வாக அதிகாரிமற்றும் பணியார்கள் பெற்றுக் கொண்டதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.