வடமதுரை பெருமாள் கோயிலில் லட்ச தீபம்!
ADDED :4788 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்ச தீப விழா நடந்தது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த 2006ம் ஆண்டு முதல் கார்த்திகை மாதத்தில் லட்ச தீப விழா நடக்கிறது. ஏழாவது ஆண்டாக நேற்று கோயில் வளாகம், சன்னதி வீதியில் சக்கரம், சங்கு, நாமம் உள்ளிட்ட பல அழகிய வடிவங்களில் அகல்விளக்குகள் பள்ளி மாணவர்கள், பொதுமக்களால் அடுக்கபட்டது. மாலை 6.05 மணிக்கு மூல ஸ்தானத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீப கம்பம் முன்க எழுந்தருளினார். திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டதும், லட்ச தீபம் ஏற்றப்பட்டது. செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் அறிவழகன், சவுந்தரராஜ பெருமாள் அறக்கட்டளையினர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.