பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் தரிசனம்
ADDED :265 days ago
மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் 18 நாடுகளை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாள் கோவில் கோபுரத்தை தரிசித்தனர்.
ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, போலந்து உட்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் அமைதி நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இன்று ஒரு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாள் கோவில் கோபுரத்தை தரிசித்தனர். தொடர்ந்து அவர்கள் சங்கரன்கோவிலில் பிப்.,17 ல் வழிபாடு நடத்த உள்ளனர்.