உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவதண்டாயுதபாணி வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை

சிவதண்டாயுதபாணி வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம் எரதிமக்காள்பட்டி சிவதண்டாயுதபாணி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. பக்தர்கள் தங்கள் கொண்டு வந்த மஞ்சளை கோயில் வளாகத்தில் அரைத்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல வகை அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விவசாயம் மேம்படவும் தொழில் வளம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !