உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய சேஷ வாகனத்தில் தி.நகர் திருப்பதி பத்மாவதி தாயார் உலா

பெரிய சேஷ வாகனத்தில் தி.நகர் திருப்பதி பத்மாவதி தாயார் உலா

சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர்., பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை தாயார் பெரிய சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 26ம் தேதி வரை நடக்கும் இந்த உற்சவத்தில் இரண்டாம் நாளான இன்று காலை தாயார் பெரிய சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை காலை முத்துப்பந்தலும், இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடக்கிறது. கல்ப விருக்‌ஷ, ஹனுமந்த வாகன புறப்பாடு பிப்.,20ம் தேதி நடக்கிறது. அடுத்த நாளான 21ம் தேதி பல்லக்கு உற்சவமும், கஜ வாகன புறப்பாடு; 22ம் தேதி சர்வபூபால வாகன, கருட வாகன புறப்பாடு நடக்கிறது.  பிப்., 23ல், சூரிய, சந்திர பிரபை வாகன புறப்பாடு; 24ம் தேதி காலை ரத உற்சவமும், இரவு அஸ்வ வாகன புறப்பாடும் நடக்கிறது. அடுத்த நாள் 25ம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. வரும், 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரும், 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் காலை, 11:30 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. நேற்று முதல் முதல் 20ம் தேதி வரையும், 23ம் தேதி மாலையும் ஊஞ்சல் சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !