/
கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் தரிசனம்
காளஹஸ்தி சிவன் கோயிலில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் தரிசனம்
ADDED :262 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பெம்மசானி. சந்திரசேகர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தரிசனம் செய்தார். புகழ்பெற்ற காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சரை காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர் ரெட்டி , முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோலா.ஆனந்த் மற்றும் கோயில் செயல் அதிகாரி பாபி ரெட்டி ஆகியோர் பூர்ணகும்பத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து, காளஹஸ்தீஸ்வரயையும், ஞானப் பிரசுனாம்பிகை தாயாரையும் அமைச்சர் சிறப்பு தரிசனம் செய்தனர். கோயிலின் வேத பண்டிதர்களும், அர்ச்சகர்களும் வேத மந்திரங்களுடன் சிறப்பாக ஆசீர்வதித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர் கோலா ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.