செராடு வனதுர்க்கை அம்மன் கோவிலில் உற்சவம் கோலாகலம்
ADDED :251 days ago
பாலக்காடு; செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே உள்ளது செராடு வனதுர்க்கை அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவ நிகழ்ச்சிகள் கடந்த பிப்., 20ம் தேதி தொடங்கியது. உற்சவ நாளான நேற்று காலை 9:00 மணிக்கு செண்டை மேளம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்சீவேவி நடந்தது. 12:00 மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 5:00 மணிக்கு செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க யானை மீது அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. இரவு நடக்கும் காழ்ச்சீவேவியோடு உற்சவம் நிறைவு பெற்றது.