பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மதுரையில் ஹயக்ரீவர் ஹோமம்
ADDED :255 days ago
மதுரை; மதுரை கோச்சடை முருகன் கோயிலில் இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற கோயில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்திக்கு ஹோமம், பூஜைகள் நடந்தன. கோயில் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த சிறப்பு ஹோமத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பூஜையில் வைத்த எழுது பொருட்களை பிரசாதமாக பெற்றனர்.