ஈஷாவில் யக்ஷா கலைத்திருவிழா: பரவசத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள்
ADDED :255 days ago
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த யக்ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாளில் நடந்த ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, யக்ஷா கலைத் திருவிழாவின் நடந்து வருகிறது. யக்ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியை, லட்சுமி மற்றும் ஈவண்ட் ஆர்ட் நிறுவனத்தை சேர்ந்த சரஸ்வதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இரண்டாம் நாளான நேற்று, தேசிய விருது பெற்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் ராகுல் தேஷ் பாண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், அவருடன், நிகில் ரத்னாகர் பதக், ஆஷிஷ் தத் சவுபே, பூர்ணிமா திலிப் செக்டே உள்ளிட்ட இசை கலைஞர்கள் பங்கேற்று அசத்தினர். இந்நிகழ்ச்சியை, நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.