ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்
புதுச்சேரி ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு 50 கிலோ மிளகாய் பொடி அபிஷேகம் உள்ளிட்ட ஆறு வகை அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும் சந்தனம் பால் தயிர், எலும்பிசை,மஞ்சள், இளநீர், உள்ளிட்ட ஆறு வகையான சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற மிளகாய் பொடி அபிஷேகத்தில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் திருமண தோஷம் நீங்கும் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.