உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தம் : மே7ல் தேரோட்டம்

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தம் : மே7ல் தேரோட்டம்

தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி,  சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று (3ம் தேதி) காலை பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய்ஆனந்த், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா, கண்காணிப்பாளர் சத்யராஜ், மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மே 7ம் தேரோட்டம் :  சித்திரை பெருவிழாவிற்கான, கொடிேயற்றம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் மே மாதம் 7-ந்தேதி நடக்கிறது. மே 10-ந்தேதி சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !