தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற உடலில் தீபம் ஏற்றி வழிபாடு
ADDED :252 days ago
கூடலுார்; இன்று துவங்க உள்ள அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய உடலில் தீபம் ஏற்றி கூடலுார் நர்சரி பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து வழிபட்டனர். இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் துவங்க உள்ளது. தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளி மாணவர்கள் புகழ்வேந்தன், தக்சிதா உடலில் தீபம் ஏற்றி யோகாசனம் செய்து வழிபட்டனர். தேனி மாவட்ட யோகாசன பயிற்சியாளர் ரவி ராம், பள்ளி முதல்வர்கள் பாலகார்த்திகா, சகிலா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.