வெள்ளீஸ்வரர் கோவிலில் புதிய மரத்தேர் செய்யும் பணி துவக்கம்
ADDED :251 days ago
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவிலின் உப திருக்கோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலின் புதிய மரத்தேர் செய்யும் பணி துவக்க விழா மற்றும் அருள்மிகு வேம்புலி மாரியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சுங்கு விநாயகர் திருக்கோயிலின் பாலாலயம் சுபமுகூர்த்த விழா 2ம் தேதி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோபூஜை, மகாகணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி பூஜை, நவகிரக பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது. விழாவில் மாங்காடு காமாட்சியம்மன் வைகுண்ட பெருமாள் வகையறா திருக்கோயில்களின் பரம்பரை தர்மகர்த்தா மணலி ஆர் சீனிவாசன் மற்றும் துணை ஆணையர்/ செயல் அலுவலர் கே சித்ராதேவி மற்றும் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்,