தங்கக்காப்பு அலங்காரத்தில் திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் அருள் பாலிப்பு
ADDED :588 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.