புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமிகளின் 430 வது அவதார தினம்
ADDED :294 days ago
புவனகிரி; புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமிகளின் 430 வது அவதார தினம் கொண்டாடப்பட்டது. புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமிகளின் அவதார இல்லம் கோவிலாக நிர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆண்டு தோறும் அவரது அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 430 வது விழாவை முன்னிட்டு நேற்று காலை சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. காலை 6:00 மணிக்கு நிர்மல்ய அபிஷேகம், மந்ராலய மரபு படி, சுவேத நதி தீர்த்தத்துடன் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர். பகல் 12.00 மணிக்கு தீபாராதனையும், இரவு ஸ்வதிபூஜையும் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.