/
கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா; சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா
வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா; சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா
ADDED :293 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழாவின் 5ம் நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி விதி உலா நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 5ம் நாளான இன்று காலை 5:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், உற்சவர் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர்க்கு சிறப்பு அலங்காரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை, அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி காலை 9:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது.