அன்ன வாகனத்தில் காரமடை அரங்கநாத பெருமாள் வீதி உலா
ADDED :571 days ago
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா, கடந்த ஐந்தாம் தேதி இரவு, கிராம சாந்தியுடன் துவங்கியது. ஆறாம் தேதி கொடியேற்றம் நடந்தது. அன்று இரவு அன்ன வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வீதிகளில் நின்று பக்தர்கள் அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.