உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

செங்கை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

 செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கும்பாபி ஷேக விழா, சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது.


செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 2011ம் ஆண்டு, நவ., 13ம் தேதி நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா நடத்த, கோவில் நிர்வாகம், செங்கை சிவனடியார் பெருமன்றத்தினர் மற்றும் நகர பொது மக்கள் முடிவு செய்தனர். கடந்த ஆண்டு திருப்பணி துவங்கி, நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், திருப்பணிகள் முடிந்தன. நேற்று விக்னேஷ்வர பூஜையுடன், கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமம், லட்சுமி ேஹாமம் நடைபெற்றது. வரும் 20ம் தேதி காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, அவபிருத யாகம், மஹா பூர்ணாஹூதி, காலை 9:30 மணிக்கு, விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், செங்கை சிவனடியார் பெருமன்றத்தினர் மற்றும் நகர பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !