தர்மபுரி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4687 days ago
தர்மபுரி: தர்மபுரி, கருவூல காலனி, லெனின் நகர் மஹா மாரியம்மன் கோவிலில், மஹா மண்டலாபிஷேகம் பூஜை நிறைவு மற்றும் சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 7 மணிக்கு அனுக்ஞை, ஸ்ரீ மஹா கணபதி பூஜை, சங்கு பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி, சரஸ்வதி, லலிதா ஸஹஸ்ரநாம, நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. காலை, 10 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனையும், காலை, 10.30 மணிக்கு, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகமும், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது.இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது., மாலையில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையம், இரவு, 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.