திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தெப்ப உத்சவம் கோலாகலம்
ADDED :292 days ago
பூந்தமல்லி; பூந்தமல்லியில் வைணவ மகான் திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருக்கச்சி நம்பிகளின் அவதார உத்சவ விழா, பிப்., 26 ல் துவங்கி, மார்ச் 7ல் நிறைவுற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று தெப்ப திருவிழா துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், முதல் நாள் ரங்கநாதப் பெருமாளுடனும், 2ம் நாளான இன்று சீனிவாசப் பெருமாளுடனும், மூன்றாம் நாளான இன்று வரதராஜபெருமாளுடன் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளி, குளத்தை சுற்றி வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.