கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :241 days ago
காரைக்குடி; கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மார்ச் 6 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை நடந்தது. இன்று காலை ஆறாம் கால பூஜை, மூலஸ்தான அபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலையில் பூஜை செய்த புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்ப்பட்டு கற்பக விநாயகர், கோட்டை நாச்சியம்மன் கோயில் கோபுர கலசங்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.