உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி மகா ருத்ர யாகம்

பழநி சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி மகா ருத்ர யாகம்

பழநி; பழநியில் உலக நலன் வேண்டி 58 ஆம் ஆண்டு மகா ருத்ர மகா யாகம் இரண்டாம் நாளாக நேற்று சங்கராலயத்தில் நடந்தது.


பழநி அருள்ஜோதி வீதியில் உள்ள சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி 58 ஆம் ஆண்டு மகா ருத்ர மகா யாகம் மார்ச்.9.,ல் வாஸ்து ஜெபத்துடன் துவங்கியது. கங்கா தீர்த்தத்துடன், சோடச ஸஹஸ்ர மஹா கணபதி ஹோமம், நடைபெற்றது. திருஆவினன்குடியில் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மார்ச்.10., மகா கணபதி யோகம், மகாருத்ர மகா சங்கல்பம், மகா ருத்ர ஜெபம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ஸ்ரீ துர்கா சுத்த ஹோமம், நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு மகா தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் நடைபெற்றது. இன்று (மார்ச்.11), நாளை (மார்ச்.12) மகா கணபதி ஹோமம், ஸ்ரீருத்ர ஜெபம், கோ பூஜை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும். மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்கர நாமம், மாலை 6:00 மணிக்கு சுப்ரமணிய சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறும். பழநியாண்டவர் தரிசனம் மற்றும் பிரசாதம் வழங்குதல். நடைபெறும். யாகம் நடைபெறும் நாட்களில் அன்னதானம் நடைபெறும். இதில் முருகன் அடிமை பாலசுப்பிரமணியம், சங்கராலயம் சிவக்குமார், மும்பை கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம் நித்தின் மோட்டார் சக்திவேல் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !