உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் கண்டவராயன்பட்டியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நான்காவது கும்பாபிஷேகம் நடந்தது.


யாகசாலை பூஜைகள் மார்ச் 8ல் துவங்கின. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், கொன்னையூர் சிவசங்கரலிங்கம் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் பூஜைகள் நடந்தன. இன்று காலை 9:40 மணிக்கு நான்காம் காலயாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி கோபுர, விமானங்களுக்கு சென்றது.பின்னர் காலை  10:03 மணிக்கு புனிதநீரால் கலசங்களுக்கு அபிசேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. கண்டவராயன்பட்டி நகரத்தார், நாட்டார், பையூர் நாட்டார் சீர் கொண்டு வந்தனர். இரவில் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை திருவீதி உலா நடந்தது. முன்னாள்  ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம், அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர். வாழ்த்தரங்கம்,நடனம்,கவிதை அரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாட்டினை தலைவர் சிவசுப்பிரமணியன்,செயலர் பேராசிரியர் குமரப்பன், பொருளாளர் நாச்சியப்பன், இணைச் செயலாளர்கள் தேனப்பன், சொக்கலிங்கம் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !