திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு
ADDED :577 days ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷத்துடன் வழிபட்டனர்.