உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டணம் ராமர் கோவில் ஆண்டு விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

பட்டணம் ராமர் கோவில் ஆண்டு விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பட்டணம் ராமர் கோவிலில், 11 ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி பட்டணம் கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் நேற்று (11ம் தேதி) 11ம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், பட்டணம் சிவன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்து பல்வேறு அபிஷேகம், அலங்கார மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !