புல்மேடு வழியாக செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
ADDED :4688 days ago
மூணாறு: புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்ல பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சபரிமலைக்கு வண்டிபெரியாரில் இருந்து சத்திரத்திற்கு ஜீப்பில் சென்று, அங்கிருந்து 24 கி.மீ., நடந்து சன்னிதானத்தை அடையலாம். இவ்வழியில் தொலை தொடர்பு நெட்வொர்க் வசதி ல்லை. விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. நான்கு நாட்களுக்கு முன் இரவில் இவ்வழியாக நடந்து சென்ற, கொல்லத்தைச் சேர்ந்த பெண்கள், ஐயப்ப பக்தர்கள் வழி தவறி, வனத்திற்குள் சிக்கினர். இவர்களை, போலீசார் மீட்டனர். பாதுகாப்பு கருதி தற்போது, பகல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.