அவிநாசி காரண பெருமாள் கோவில் சப்பரத்தேர் கவ்வாள திருவிழா
ADDED :288 days ago
அவிநாசி; அவிநாசியில் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ தேவி பூமாதேவி சமேத ஸ்ரீ காரணப் பெருமாள் கோவிலில் சப்பரதேர் கவ்வாளம் திருவிழாவிற்கு கடந்த 6ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்யாண உற்சவம், திருத்தேர் ஆகியவை நடைபெற்றது. நாளை பரிவேட்டை, கவ்வாள உற்சவம், தண்ணீர் மற்றும் பந்தம் சேவை, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீர் விழாவுடன் சப்பரத்தேர் கவ்வாள விழா நிறைவு பெறுகிறது.