உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி

தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி

கடலுார் : மாசி மகத்தையொட்டி கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில், சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மாசி மாத பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் மாசி மக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமிகள் கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. இன்று (12ம் தேதி), திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர், திருவந்திபுரம் செங்கமலத்தாயார் சமேத தேவநாதசுவாமி, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி உள்ளிட்டவை தேவனாம்பட்டினம் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !