உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதில் சுவாமி குமரவடங்கபெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.  அதிலும் குறிப்பாக கந்த சஷ்டி திருவிழா, வைகாசி விசாக திருவிழா, பங்குனி உத்திரம், திருகார்த்திகை, மாசி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் மாசி திருவிழா மார்.,3ல் கொடியேற்றதுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாள் தேரோட்டம் 12ம் தேதி நடைபெற்றது. விழாவில் 11 ம் திருநாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. சுவாமி குமரவடங்கபெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !