உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளிமலை சுப்ரமணியசாமி கோயிலில் 4 நாள் தேரோட்டம் நிறைவு

வள்ளிமலை சுப்ரமணியசாமி கோயிலில் 4 நாள் தேரோட்டம் நிறைவு

வேலூர்; வள்ளிமலை சுப்ரமணியசாமி கோயில் மாசி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழா 4 நாள் தேரோட்டம் நிறைவுபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர் 


வேலூர்மாவட்டம்,காட்பாடி தாலுகா வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழா மிகப் பிரமாண்டமாக 15 நாள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 20 ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மார்ச் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ தேர் திருவிழா. மார்ச் 3ஆம் தேதி விநாயகர் உற்சவத்தில் தொடங்கி மார்ச் 9ம் தேதி யானை வாகனம் வரை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அப்போது இன்னிசை கச்சேரி கரகாட்டம் மயிலாட்டம் நாடகம் மற்றும் வானவேடிக்கைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 4 நாள் தேரோட்டம் மார்ச் 10முதல் 13 வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக   காலை பெருமாள்குப்பம். கிராம பொதுமக்கள்  தேர் மீதுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு மேளதாளம் கரகாட்டம்  மற்றும் பேண்ட் வாத்தியத்துடன் சீர்வரிசை எடுத்து வந்து சீர் செய்த பிறகு தேர் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ந்து மாலை 6 மணி அளவில் லட்சம் கணக்கான பக்தர்களுக்கு இடையே தேர் நிலையை வந்து அடைந்தது.இரவு கோவில் வளாகத்தில்  இன்னிசைக் கச்சேரி மற்றும் கோயிலைச் சுற்றி ஆங்காங்கே தெருக்கூத்து நாடகங்கள்நடைபெற்றது.இதில் வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை மற்றும் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து  லட்சத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !