உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனிச்சம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை

அனிச்சம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை

விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடந்தது.

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் கிராமம், அண்ணா நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 20ம் ஆண்டு மயானகொள்ளை விழா கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வீதியுலா நடந்தது. மதியம் 2.00 மணிக்கு மகாராஜபுரம் மயானத்தில் மயானகொள்ளை நடைபெற்றது. பின், பக்தர்களுக்கு அன்னதானம், அங்காளம்மன், காளி, குறத்தி, காட்டேரி,பாவாடைராயன் சுவாமிகள் வேடத்தில் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இரவு 7.00 மணிக்கு கும்ப படையல் நடந்தது. ஏற்பாடு கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !