கொளத்துார் கல்யாண ரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :200 days ago
திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராஜகோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டு சிறப்பு உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதான விழாவாக நவராத்திரி விழா, தைப்பொங்கல் விழா, பரிவேட்டை உற்சவம், மாசி மக தெப்பல் உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. பங்குனி மாதத்தின் முதல் ஞாயிறுக்கிழமையான நேற்று, திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. அறங்கநாதர், ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பழ சீர்வரிசையுடன் வேதமந்திரம் உச்சரிக்க திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மலர் அர்ச்சனையும், விசேஷ வழிபாடும் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வளையல் தொகுப்பு வழங்கப்பட்டது.