சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவிலில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் தரிசனம்
ADDED :214 days ago
டில்லி; டெல்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவிலில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தரிசனம் செய்தார்.
நியூசிலாந்தின் பிரதமர், ஆர்.டி. ஹான் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் உட்பட 110 பேர் கொண்ட குழு புதுடில்லியில் உள்ள பிஏபிஎஸ் சுவாமிநாராயண் அக்ஷர்தத்திற்கு வந்தனர். பிரதமர் லக்சன் மற்றும் அவரது குழுவினருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லக்சன் சுவாமிநாராயண் அக்ஷர்தம் மந்திரில் மலர்கள் சமர்ப்பித்து அங்கு நடைபெற்ற அபிஷேக விழாவில் பங்கேற்றார்.