உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்க பஞ்சமி; உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ரங்க பஞ்சமி; உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மத்தியப் பிரதேசம்: உஜ்ஜைன், மகாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோவிலில் ரங்க பஞ்சமியை முன்னிட்டு பஸ்ம ஆரத்தி செய்யப்பட்டது.


ரங்க பஞ்சமி என்பது பால்குன கிருஷ்ண பக்ஷ பஞ்சமியில் கொண்டாடப்படும் விழாவாகும். இது ஹோலி பண்டிகையைத் தொடர்ந்து வரும் ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுகிது. இன்று ரங்க பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு சிவன் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் இருக்கிறார். இவரை வழிபட்டால் எதிர்கால வாழ்வு உயரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று காலை நடைபெற்ற பஸ்ம ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !