கள்ளக்குறிச்சி வில்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :210 days ago
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ராஜூ இருதய மருத்துவமனை வில்வ விநாயகர் கோவிலில், ஸம்வத்ஸர அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில், ராஜூ இருதயம்–தோல் மருத்துமனை உள்ளது. இங்குள்ள வில்வ விநாயகர் கோவிலில் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட 5ம் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, ஸம்வத்ஸர அபிஷேகம் நேற்று முன்தினம் காலை விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூஜை, ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு சக்கரவர்த்தி, முதன்மை மருத்துவர் இந்துபாலா, மூத்த மருத்துவர் சுகந்தி கண்ணன் மற்றும் பக்தர்கள், ஊழியர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.