உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர்; முகம் சுளிக்கும் பக்தர்கள்

சிங்கம்புணரி கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர்; முகம் சுளிக்கும் பக்தர்கள்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கி கழிவு நீர் குட்டையாக மாறியதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் பின்புறம் மழைநீர் தேங்கி ஆண்டு முழுவதும் குட்டையாக காட்சியளிக்கிறது. அந்த நீர் கழிவுநீராக மாறி கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. எனவே இப்பகுதியில் மழைநீர், கழிவுநீர் தேங்காதவாறு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !