ஒருகால பூஜை திட்ட கோயில்களுக்கு ரூ.110 கோடி நிதி; திட்டம் துவக்கி வைப்பு
ADDED :208 days ago
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை கூட நடத்த நிதி வசதி இல்லாத கோவில்களுக்கு, ஒருகால பூஜை திட்டத்திற்கான ரூ.110 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், விரிவுபடுத்தப்பட்ட 1,000 ஒருகால பூஜைத் திட்டகோயில்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கிட முதற்கட்டமாக 10 அர்ச்சகர்களிடம் ஆணைகளை முதல்வர் வழங்குகினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.