அனுமன் கோயில்களில் ராமநவமி விழா; சிறப்பு வழிபாடு
ADDED :203 days ago
பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதி ஹனுமன் கோயில்களில் ராமநவமி விழா நடக்கிறது. எமனேஸ்வரம் ஆஞ்சநேய பெருமான் கோயிலில் ராமநவமி விழா ஏப்.,29 அல் துவங்கியது. தினமும் ராமர் பல்வேறு அவதாரங்களில் அருள்பாளிக்கிறார். ஏப்.,5 மாலை 5:00 உலக நன்மைக்காகவும், புத்திர பாக்கியம் வேண்டியும் புத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது. மறுநாள் ராம ஜனனம், சங்காபிஷேகம் நடக்க உள்ளது. ஏப்.,7 மாலை சீதாராமன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. பரமக்குடி ஹனுமார் கோதண்டராமசாமி கோயிலில் தினமும் ராமர் பல்வேறு அவதாரங்களில் வீதி உலா வருகிறார். இதேபோல் பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழாவில் சங்காபிஷேகம் நடக்க உள்ளது.