கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் தரிசனம்
ADDED :208 days ago
செந்துறை; நத்தம் செந்துறை அருகே கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி முதல் நாள் இரவு அம்மன் வானவேடிக்கைகளுடன் முளைப்பாரி ஊர்வலத்துடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.பின்னர் பக்தர்கள் மாவிளக்கு, பூக்குழி இறங்குதல், கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.