உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்குடியில் வெண்ணைத்தாழி திருவிழா; ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு

மன்னார்குடியில் வெண்ணைத்தாழி திருவிழா; ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு

மன்னார்குடி; மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவழும் கண்ணனாக வந்த ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு செய்தனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி திருவிழா இன்று நடைபெற்றது.  தவழும் கண்ணனாக வந்த ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து பக்தர்கள் வழிபட்டனர்.  இக்கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள் பங்குனி திருவிழாவும், அதனை  தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா  சென்ற   18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முக்கிய 16-ம் நாள் திருவிழா வெண்ணைத்தாழி உற்சவம்  நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணிக்கு துவங்கியது. சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கையில் வெண்ணெய் குடத்தை  ஏந்தி தவழும் கண்ணனாக வந்த ராஜகோபாலனின் முன், பின் அலங்காரங்களை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை அடித்து கோபாலா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி வழிபாட்டதை காணமுடிந்தது.  4 வீதிகள் மற்றும் கடைவீதி வழியாக மதியம் 12.30 மணிக்கு  பந்தலடி வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைவார்.  சுமார் 4 கிலோமீட்டர் தூரம்  சுவாமி வீதி உலாவில் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அல்லாமல் வெளிமாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் இந்த வெண்ணைத்தாழி திருவிழாவில் பங்கேற்கின்றனர் என்பதால் நகரம் முழுவதும் விழாக்கோலமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !