பாடியநல்லுார் முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
ADDED :269 days ago
செங்குன்றம் ; செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில், முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இதன் வைர விழா ஆண்டை ஒட்டி, பங்குனி உத்திர பெருவிழா, நேற்று காலை துவங்கியது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடம் சுமந்து சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.